தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில் நிலையத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கடந்த ஆண்டை விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றங்கள் அதிகரிக்க மதுப் பழக்கமே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
சென்னையில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.