நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்த டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்கள் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டா மலைகளில் 21 நாள் நீடித்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் காயமடைந்தவர்கள் ஆவர்.
இந்த நலம் விசாரிப்பு சந்திப்பின் போது சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.