சென்னை அடுத்த குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூர் – பல்லாவரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கரைமா நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
இந்நிலையில் மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடித்து அகற்றியதாகக் கூறி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்குச் சென்ற அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.