10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதியிருந்தனர். அதேபோல, கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளன. காலை 9 மணிக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.