சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போர் நிறுத்தப்பட்ட போதும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், சிந்து நதி நீர் விவகாரம் தொடர்பாக மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளதெனவும், இந்த ஒப்பந்தம் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.