கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கலைத்துறை ரியல் எஸ்டேட் துறை என எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். தற்போது வான் ஸ்பேஸ் என விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் கம்பெனி ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டசபையிலே தமிழ்நாடு அரசு வான்வழிக் கொள்கையை வெளியிடுகிறோம் என்று திடீரென அறிவித்தார்கள். முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறார் என மகிழ்ச்சி அடைந்தோம், ஆனால் பின்னர் தான் தெரிந்தது அனைத்தும் போலி என எனறும் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.