மத்திய அமைசசர் எல்.முருகன் இரு நாள் பயணமாக திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தலா சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெலோனியா சுற்றுலா அலுவலத்தில் மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மாவட்டத்தின் வளர்ச்சி குறிகாட்டிகளை விரிவாக மதிப்பாய்வு செய்து, மேலும் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டியதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், பிராந்தியத்தில் உள்ள குடிமக்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.