நாகை – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து 100வது பயணத்தை எட்டியுள்ளது.
நாகை மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சிவகங்கை என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகை – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து 100வது பயணத்தை எட்டியுள்ளது. இதனையொட்டி, கப்பல் நிறுவனம் சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், கப்பல் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், துறைமுக அலுவலர், சுங்கத்துறை அதிகாரி உள்ளிட்டோர் கொடியசைத்து நூறாவது பயணத்தை தொடங்கி வைத்தனர்.