உடுமலைப்பேட்டையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பத்ம சூர்யா இயற்கை மருத்துவமனையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
2 நாள் நடைபெறும் பயிற்சி முகாமில், அகில பாரத தலைவர் சாய் ரெட்டி, பொதுச்செயலாளர் மோஹினி மோகன், அமைப்புச் செயலாளர் தினேஷ் குல்கானி, தமிழ்நாடு மாநில தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், வேளாண் பிரச்சனைகள் குறித்தும், அதற்குத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதில், தமிழகம் மற்றும் கேரளாவைக் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.