அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன் அடிப்படையில், சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.