10 மற்றும் 11-ம் பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 புள்ளி 80 சதவீத மாணவர்கள், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 92 புள்ளி 09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தேர்ச்சி விகிதங்களில் வடமாவட்டங்கள் தொடர்ச்சியாக பின்தங்குவது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி,
வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்கள் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடைசி 10 இடங்களை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
எனவே, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.