நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.
நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1 பி ரேடார் இமேஜிங் செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 6.59 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்த ராக்கெட்டில் ஆயிரத்து 710 கிலோ எடை கொண்ட OIS-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். இந்த நிலையில், 22 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது.