மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள SBI வங்கிக்கு வந்த முதியவர் ஒருவர் வாடிக்கையாளர் போல அமர்ந்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து யாரும் பார்க்காத வேளையில் மேஜையில் இருந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.