அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்ட மேலும் நான்கு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது..
இந்த கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது
இந்த நிலையில் இதில் நான்கு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார். 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.