நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீரமல்லு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படம் மே 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பவன் கல்யாண் துணை முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், திரைப்படத்தைக் காணப் பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.