தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம், அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட மானியக் கட்டணங்களை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உதவித்தொகைத் திட்டங்கள் மூலம் சேர்க்கப்படும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களுக்கு, மானியக் கல்வியை வழங்க இந்த கல்லூரிகள் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மானியத் தொகையை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை மூன்று மாதங்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.