காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையல் துணைப் பிரதமர் இஷாக் தரும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.