டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன் அடிப்படையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள ED அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், 2-வது நாளாக அவரை ED அலுவலகம் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.