கேதார்நாத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானி சாதுரியமாகச் செயல்பட்டதால், நூலிழையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்திலிருந்த நோயாளிகள் 3 பேர், மருத்துவர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.