திருச்சி மாவட்டம் முசிறி அருகே காணாமல் போன மகளைக் கண்டுபிடித்த தரக்கோரிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரின் மகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் ஒரு மாதத்தைக் கடந்தும் மகளைக் கண்டுபிடித்துத் தராததால் ஆத்திரமடைந்த விஜயன் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.