ஆந்திராவில் 1,000 கோடி ரூபாய் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுக்கு சாதகமாகச் செயல்பட, தானியங்கி ஆர்டர் செய்யும் முறையை முடக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதன்பின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி வந்த பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு முந்தைய ஆட்சியில் செயலாளராக பணியாற்றிய தனுஞ்சய ரெட்டி, சிறப்பு அதிகாரியான கிருஷ்ண மோகன் ரெட்டி ஆகியோரை கைது செய்தது.