காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக லிபியா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாலஸ்தீனியர்களை லிபியா அரசு ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக காசா முனையில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு, அதை அமெரிக்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிபர் டிரம்ப் முன்மொழிந்ததற்கு பல்வேறு தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.