ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஓசூரில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்று தேசியக் கொடியை ஏந்தியபடி, ஊர்வலமாகச் சென்றனர்.