சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், அந்த வழியாகச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். ராட்சத பள்ளத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி அங்கேயே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து, பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர்.
பாதாளச் சாக்கடை கால்வாய் காரணமாகச் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.