பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின், பாகிஸ்தானில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் கலந்து கொண்டு பேசியவர்,
ஓசூரில் கொட்டுமழையிலும் தேசியகொடி ஏந்தி பேரணியை நிறைவு செய்துள்ளோம். கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களைத் தாண்டி அனைவரும் ஒன்று திரண்டு இந்தியர் என்கிற உணர்வோடு தேசியக்கொடி ஏந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 22-ம் தேதி பஹால்காமில் அப்பாவி இந்தியர்கள் 26 பேரைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது மதத்தின் அடிப்படையில் படுக்கொலை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்துக்களிடமும், இஸ்லாமியர்களிடம் விசமத் தனத்தால் பிரச்சனையை உருவாக்கி நாட்டுக்குள்ளே பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று அந்த தீவிரவாதிகளின் நோக்கம்.
இந்தியர்களால் நாம் ஒன்றுப்பட்டு மே 7-ம் தேதி நமது பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின்னர் பாகிஸ்தானில் அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் தீவிர வாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நமது இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின்பு தான் நமது ராணுவம் பாகிஸ்தானில் பதில் தாக்குதல் நடத்தி நமது வலிமையை நிலை நிறுத்தினோம் என அண்ணாமலை தெரிவித்தார்.