தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அறுவடைக்கு தயாகி வரும் வேளையில் வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், மரங்களைப் பார்வையிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.