பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் எனச் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்
நடிகர் ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார், தன் மீது எழுந்துள்ள அவதூறுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரவி மோகனின் ஆலோசனையின் பேரில்தான் அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கும் நிலைக்கு, தான் தள்ளப்பட்டதாகவும், தோல்வியடைந்த படங்களுக்கான கடனை, தான் மட்டும் தான் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.