பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி அதில் வெற்றி கண்டது பெருமையாக இருப்பதாக இந்தியக் கடற்படை வீரர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியக் கடற்படை சார்பில், சுமார் 50-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பங்கேற்று குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கடற்படை வீரர் மகேஷ், பாகிஸ்தானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது பெருமையாக இருப்பதாகவும், எப்போது அழைப்பு வந்தாலும் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்