இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட அபு சயியுல்லா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
2001-ம் ஆண்டு காஷ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 2005-ல் பெங்களூருவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, 2006-ம் ஆண்டில் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்றவற்றில் அபு சயியுல்லாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சயியுல்லாவை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.