முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மழைக் காலம் தொடங்கும் முன்பாக முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பராமரிப்பு பணி தொடர்பாக அணை மேற்பார்வை குழு பிறப்பித்த பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், 2006, 2014ல் வழங்கிய முல்லைப்பெரியாறு இறுதித் தீர்ப்புகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பற்றிய வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.