பெரம்பலூரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் தனியார் விடுதியில் புரட்சி தமிழகம் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது . அப்போது அங்குக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்களது தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சியின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாகப் பேசுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் போலீசாரின் தடுப்புகளையும் மீறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் அரங்கின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் புரட்சி தமிழகம் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் காணப்பட்டது.