டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலிக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி செய்த பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இதனை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட்கோலி, 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.