பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உறுப்பினர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் பங்கீடு இல்லை என தெரிவித்தார். பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என விளக்கம் அளித்த அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய போர் விமானங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என கூறினார்.