மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆறு தலைமுறைகளாக பணிபுரிந்து கொண்டு, வசித்து வரும் மக்களை புலிகள் காப்பகம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைத் தடுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு மீதான விசாரணையின்போது மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர உத்தரவிட்டதோடு, அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கடந்த டிசம்பர் மாதம் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு இதுவரை எந்தவித அறிக்கையும் சமர்பிக்கப்படாத நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.