கர்நாடகாவில் மே 26ஆம் தேதி வரை கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கர்நாடகாவில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பெல்காம், சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், பெங்களூருவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாகல்கோட், தார்வாட், ஹாவேரி, ஹாசன், குடகு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சாமராஜநகர், பெங்களூரு சிட்டி, டிஜிஹள்ளி, கனகபுரா, ஹுனகுண்டா, நாராயண்பூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.