சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன் அடிக்கவில்லை என விமர்சிப்பவர்கள் வெளிநாட்டு மண்ணில் அவர்கள் என்ன செய்தார்கள் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், அவர் வெளிநாட்டு மண்ணில் சரிவர ரன் அடித்ததில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, சும்பன் கில்லை விமர்சிப்பவர்கள் முதலில் தங்கள் செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்