கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள அடியபாடியில் கனமழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
மண் மேடு இடிந்து விழுந்து ஒரு வீட்டின் முற்றத்திற்குள்ளும் நுழைந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அவ்வழியாக உள்ள சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். கனமழை காரணமாக மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படுமோ என உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.