அசாம் மாநிலத்தில் தொடர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரத்தில் அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில், கவுகாத்தியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக மழைநீரில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். வரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.