இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத்தை இந்தியா செயல்படுத்துவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிடம் பல சுகாதார கட்டமைப்புகள் உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.