காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.