அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 16-ம் தேதி முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பொழிந்து வெப்பத்தை தணித்தது.
இந்த நிலையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும்,
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகவுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.