மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை நாளை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ் ஜனத்திற்குப் பேட்டியளித்த திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் தப்சியால், பயணிகளின் கோரிக்கையை ஏற்று 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குழித்துறை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான குழித்துறையில், ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.