சேலத்தில் உயிருக்குப் போராடும் ஏற்காட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் உயிரைக் காக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்காட்டைச் சேர்ந்த சிறுவன் பிளஸ்வின், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சமையலறையிலிருந்த சூடான எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டான்.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படும் நிலையில், உதவி கேட்டு, சிறுவனின் தாய், சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுப் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவனின் உயிரைக் காக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.