ரிது வர்மாவின் முதல் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது வர்மா. இவர் கடைசியாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்த மசாகா படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் தனது முதல் தெலுங்கு வெப் தொடரில் நடித்து வருகிறார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த தொடருக்கு தேவிகா மற்றும் டேனி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் ஜூன் 6-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.