குஜராத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில், குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6 ஆயிரத்து 500 பேரை கண்டறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக வீடுகளைக் கட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடுகளை இடிக்கும் பணி தொடர்கிறது.