டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் உட்பட பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் கடந்த 16-ம் தேதி ED சோதனை நடைபெற்றது.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் பலர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், முக்கிய நபராகப் பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகவில்லை. இதனால் அவர் எங்கு உள்ளார் என்ற விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.