கன்னடம் பேச மறுத்த SBI வங்கி மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனேகல் தாலுகாவின் சூர்யா நகரில் உள்ள SBI வங்கி மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்தது மற்றும் குடிமக்களை அலட்சியப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
அவரை இடமாற்றம் செய்ய SBI வங்கி எடுத்த விரைவான நடவடிக்கையைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.