சத்தீஸ்கர் மாநிலத்தில் 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான பகுதியில், போலீசார் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் 27க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டையின்போது போலீசாருக்கு உதவி புரிந்த ஒருவரும் உயிரிழந்தார் என சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.