போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் கொடியிறக்க விழா நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அட்டாரி- வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க விழா நடைபெற்றது.