அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், கேரள மாநிலத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.